தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

13.3.18

தேசிய பெண் ஆசிரியர்கள் மாநாடு தமிழகத்தில் ஜூலை மாதம் நடைபெறுகிறது

இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் தேசிய செயற்குழுக் கூட்டம் 11-03-2018, ஞாயிற்றுக் கிழமையன்று புதுதில்லியில் உள்ள சாதிப்பூர், ஆசிரியர் பவனில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தேசிய தலைவர் அபித்முகர்ஜி தலைமை தாங்கினார். தேசிய பொருளாளர் தி.கண்ணன், தேசிய பொதுச்செயலாளர் சி.என்.பார்தி, இணை பொதுச்செயலாளர் கே.சி.ஹரிகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமிழகத்தின் சார்பில் இக்கூட்டமைப்பில் இணைந்துள்ள தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் சங்கர், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில தலைவர் ச.மோசஸ், தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழக மாநிலத்தலைவர் கே.பி.ஓ.சுரேஷ், தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழக மாநில பொதுச்செயலாளர் செ.நா.ஜனார்த்தனன், தமிழ்நாடு தனியார் பள்ளி ஆசிரியர் அலுவலர் சங்கம் மாநிலத் துணைத் தலைவர் ரமேஷ்குமார், தமிழ்நாடு பதவிஉயர்வு பெற்ற முதுகலைப் பட்டதாரி சங்க பொதுச் செயலாளர் உதயசூரியன், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் மாநிலப் பொதுச்செயலாளர் பேட்ரிக் ரெய்மன்ட் மற்றும் பல்வேறு மாநிலங்களில் உள்ள ஆசிரியர் சங்கங்களின் மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினார்கள்.

செயற்குழுக் கூட்டத்தின் முடிவுகள் மற்றும் தீர்மானங்கள்:
  • தேசிய பெண் ஆசிரியர் பொது மன்றத்தின் (National Forum for Women Teachers) சார்பில் தேசிய அளவிலான மகளிர் மாநாடு ஜுலை மாதம் தமிழகத்தில் நடத்துவது. அதற்கு முன்னர் ஜுன் மாதத்திற்குள் அனைத்து மாநிலங்களிலும் மாநில பெண் ஆசிரியர் மாநாடுகளை நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
  • இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் 7ஆவது தேசிய மாநாடு 2018 மே 4, 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில், ஒரிசா மாநிலம் பூரி மாநகரில் மிக சிறப்பாக நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது.
  • நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 6 சதவீதமும், மத்திய அரசின் பொது பட்ஜெட்டில் 10 சதவீதமும் பள்ளிக்கல்விக்காக நிதி ஒதுக்கீடு செய்திட வேண்டும். 
  • தனிநபர் வருமான வரி வரம்பினை ஐந்து இலட்சமாக உயர்த்திட வேண்டும்.
  • மேலும் 5 இலட்சம் ரூபாய் முதல் 8 இலட்சம் ரூபாய் வரை உள்ள வருமானத்திற்கு 10சதவீத வரியும் 8முதல் 13 இலட்சம் ரூபாய் வரை 20சதவீத வரியும் ரூபாய் 13 இலட்சத்திற்கு மேல் 30 சதவிகித வரியும் விதிக்கும் வகையில் திருத்தம் செய்து அறிவித்திட வேண்டும்.
  • வருமான வரி செலுத்தும் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் பொதுவான கழிவாக (Standard Deduction) குறைந்தபட்சம் ஆண்டிற்கு ரூபாய் ஐம்பதாயிரம் என திருத்தியமைத்திட வேண்டும்.
  • வீட்டு வாடகைப்படி, மருத்து வப்படி, அகவிலைப்படி, மருத்துவ செலவினம் மீண்டும் பெறுதல் ஆகி யவை மேற்கொள்ளும் செல வினங்களுக்காக தரப்படும் படிகள் என்பதால், இவற்றை வருமானமாகக் கருதாமல் செலவினமாக கருத வேண்டும்.
  • 80சி பிரிவில் மேற்கொள்ளப்படும் சேமிப்பிற்கான கழிவுத்தொகை ரூபாய் மூன்று இலட்சமாக உயர்த்த வேண்டும்.
  • புதிய ஓய்வூதியத் திட்டத்தினை கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தினை ஆசிரியர்களுக்கும் அரசு ஊழியர்களுக்கும் நடைமுறைப் படுத்திட வேண்டும்.
என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்