தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

27.9.12

திறனறிவுத்தேர்வில் பழைய பாடத்திட்டத்தில் கேள்விகள்: மாணவர்கள் அதிர்ச்சி

தமிழகத்தில் கிராமப்புற மாணவர்களுக்கு, ஞாயிறு (செப்.23) நடந்த திறனறிவு தேர்வில், பழைய பாடத்திட்டத்தில் கேள்விகள் கேட்கப்பட்டன.

எட்டாம் வகுப்பு முடித்து 9ம் வகுப்புக்கு செல்லும் கிராம மாணவர்களுக்கு, 8ம் வகுப்பில் படித்த பாடங்கள் அடிப்படையில் பள்ளி கல்வித் துறை சார்பில் ஆண்டுதோறும் திறனறிவு தேர்வு நடத்தப்படும். கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களில் தலா 25 கேள்விகள் வீதம் 75 கேள்விகளும், பொது அறிவு பகுதியில் 25 கேள்விகளும் இடம் பெறும். இதில், தேர்ச்சி பெற்று, மாவட்டத்தில் முதல் 100 (50 மாணவர்கள், 50 மாணவிகள்) இடங்களை பெறும் மாணவர்களுக்கு பிளஸ் 2 வரை ஆண்டுதோறும் ரூ.ஆயிரம் கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.

இந்தாண்டுக்கான தேர்வு ஞாயிறு (செப்.23) நடந்தது. மாவட்டத்தில் தலா 600 மாணவர்கள் வீதம் பங்கேற்றனர். தேர்வில், அறிவியல், சமூக அறிவியல், கணிதம் பாடங்களில் இடம் பெற்ற கேள்விகள், சமச்சீர் கல்வி பாடத்திட்ட அடிப்படையில் இல்லாமல், அதற்கு முந்தைய பாடத்திட்டத்தில் இருந்து கேட்கப்பட்டன. இதனால், மாணவர்கள் அதிர்ச்சிடைந்தனர்.

ஆசிரியர் சங்க நிர்வாகிகள் கூறியதாவது: தேர்வில் இடம்பெற்ற கேள்விகள் சமச்சீர் கல்வி பாடத்திட்டத்திலிருந்து கேட்கப்படவில்லை. கணிதத்தில் பழைய பாடத்திட்டத்தில் இருந்த 2 அடிமானம், 5 அடிமானம் பகுதிகள், சமச்சீர் பாடத்திட்டத்தில் இல்லை. அதிலிருந்து கேள்விகள் இடம் பெற்றன. சமூக அறிவியல், அறிவியல் பாடங்களில் அனைத்து கேள்விகளும் பழைய பாடத்திட்டத்தில் இடம்பெற்றவை. இதனால், தேர்ச்சி விகிதம் பாதிக்கும். மறுதேர்வு நடத்தி, கல்வி உதவி தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். தேர்வில் வெற்றி பெற்றதற்கான சான்றும் வழங்கப்பட வேண்டும், என்றார்.

நன்றி:

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்