தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

30.6.12

பள்ளிகளில் சாதி சான்றிதழ் வினியோகிக்க மாணவர்களிடம் ரூ.20ல் இருந்து ரூ.100 வரை கட்டணம் வசூல்

பள்ளிகளில் மாணவர்களுக்கு தேவையான சான்றிதழ்கள் வினியோகிக்க எந்த கட்டணமும் கிடையாது. கட்டணம் வசூலிப்பது தெரிய வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என குமரி மாவட்ட கலெக்டர் எச்சரித்துள்ளார்.

குமரி மாவட்ட மீனவர்கள் குறைதீர் கூட்டம் நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று (29ம்தேதி) நடந்தது. கலெக்டர் நாகராஜன் தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் பழனிச்சாமி, மீன்வளத்துறை உதவி இயக்குனர் ரூபர்ட் ஜோதி உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கடலோர கிராம சாலைகள் மேம்பாடு, போக்குவரத்து வசதி, கடலரிப்பு தடுப்பு சுவர், தூண்டில் வளைவு, நல வாரிய பணிகள் உள்ளிட்டவை குறித்து மீனவர்கள் கேட்ட கேள்விகளுக்கு, அதிகாரிகள் பதில் அளித்தனர்.

கூட்டத்தில் மீனவர்கள் பேசியதாவது:
தமிழக அரசு பள்ளிகளிலேயே மாணவ, மாணவிகளுக்கு சாதி சான்றிதழ், வருமான வரி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் வழங்கப்படும் என அறிவித்துள்ளது. ஆனால் இது பற்றி விண்ணப்பித்துள்ள மாணவ, மாணவிகளிடம் ரூ.20 முதல் ரூ.100 வரை வசூலிக்கிறார்கள். அரசு இலவசமாக கொடுக்கப் படும் என அறிவித்துள்ளது. அப்படி இருந்தும் பள்ளிகளில் வசூல் வேட்டை நடப்பது ஏன்? இதை கலெக்டர் தடுக்க வேண்டும்.

அப்போது பேசிய கலெக்டர் நாகராஜன், பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்க எந்த வித கட்டணமும் கிடையாது. அப்படி கட்ட ணம் வசூலித்து இருந் தால் அவற்றை திருப்பி கொடுக்க வேண்டும். கல்வி அதிகாரிகள் இதை கண்காணிக்க வேண்டும் என்றார்.

நன்றி:


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்