தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

11.5.12

TET வினா விடை - அறிவியல் - பொது 13

* மியுஸா பாரடிசியாகா என்பது வாழையின் தாவரவியல் பெயர்

* கரும்பைத் தாக்கும் பூச்சிகளின் முதன்மை யானது - கரும்பு கரையான் பூச்சி

* வாழையைத் தாக்கும் பூச்சிகளை அழிக்கும் பூச்சி மருந்து - கார்போ பியுரன்

* மாலத்தீயான் என்பது - பூச்சிக்கொல்லி

* ஒளிச்சேர்க்கை, சுவாசித்தல் மற்றும் நீராவிப் போக்கு ஆகிய மூன்று செயல்களையும் நிகழ்த்தும் தாவர உறுப்பு - இலை

* தொற்றுத் தாவரத்திற்கு உதாரணம் - வாண்டா

* கூட்டுயிர்த் தாவரத்திற்கு எடுத்துக்காட்டு - லைக்கன்கள்

* கோடைக்காலத்தில் நீராவிப் போக்கைத் தடுக்க ிளைகளை உதிர்த்து விடும் தாவரம் - சவுக்கு

* இலைத் தொழில் தண்டு - சப்பாத்தி

* மார்சீலியா என்பது -நீர்த்தாவரம்

* தாவர செல்லின் செல்சுவரில் காணப்படுவது - செல்லுலோஸ்

* ஸ்கிளிரென்கைமா செல்களின் சுவரில் லிக்னின் காணப்பபடுகிறது.

* வரித்தசை நார்களின் மேலுறை - சார்கோலெம்மா எனப்படும்.

* தனக்குத் தேவையான உணவைத் தானே தயாரித்துக்கொள்ளும் உயிரிகள் - உற்பத்தியாளர்கள் எனப்படும்.

* அனைத்து உயிரிகளுக்கும் முதன்மையான ஆற்றல் மூலம் - சூரியன்

* உயற்பத்தியாளர்கள் என்று அழைக்கப்படுபவை - தாவரங்கள்

* நரம்பு திசுவின் உடல் பகுதி - சைட்டான் எனப்படும்.

* கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களை உள்ளடக்கிய வன விலங்கு பாதுகாப்பகம் - நீலகிரி வன விலங்கு பாதுகாப்பகம்.

* நிலம், நீர், காற்று மற்றும் உயிரிகளின் தொகுப்பு உயிரிக்கோளம் எனப்படும்.

* தொழிற்சாலை திண்மக் கழிவுகளை காற்றில்லா சூழலில் சிதைத்தல் முறையில் சிதைக்கலாம்.

* மரக்கட்டையின் கருநிற மையப் பகுதி - வன்கட்டை எனப்படும்.

* மண்ணிலுள்ள நூண்ணுயிரிகளின் வளர்ச்சியைத் தூண்டுவது - மண்புழு உரம்

* இலவங்க எண்ணெயிலுள்ள வேதிப்பொருள் - சின்னமால்டிஹைடு

* வளிமண்டல அழுத்தத்தை அளக்க பயன்படுவது - அனிராய்டு பாரமானி

* எலிடோரியா கார்டமோமம் என்ற தாவரம் - ஏலக்காய்

* சிஸிஜியம் அரோமேட்டிகம் என்ற தாவரத்தின் உலர்ந்த மலர் மொட்டு - கிராம்பு

* மனிதனின் விலங்கியல் பெயர் - ஹோமோசேப்பியன்ஸ்

* பித்தக் கற்களை உருவாக்குவது - கொலஸ்ட்ரால்

* மைட்ரல் வால்வு என அழைக்கப்படுவது - ஈரிதழ் வால்வு

* கடந்த கால நினைவுகளை நினைவுகூற இயலாத நிலை - அம்னீசியா

* உணவு உட்கொள்ளாத சம்யத்தில் உடலில் குளுக்கோசின் அளவு - 70 முதல் 110 மி.கிராம்/டெலிட்டர்

* ஆன்டிபாடிகளை உற்பத்தி செய்யும் வெள்ளையணு - லிம்ப்போசைட்டுகள்

* வேதியாற்றலை இயக்க ஆற்றலாக மாற்ற உதவும் செல்லும் - தடை செல்கள்

* பெரியம்மையை உண்டாக்கும் வைரஸ் - வேரியோலா வைரஸ்

* நாளமில்ல சுரப்பிகள் ஹார்மோன்களைச் சுரக்கிறது.

* பிறக்கும்போதோ காணப்படும் தைராய்டு குறைப்பு நிலையின் பெயர் - கிரிட்டினிசம்

* இரத்தத்தில் ஆக்ஸிஜனைச் சுமந்து செல்லும் திறனைக் குறைப்பது - கார்பன் மோனாக்ஸைடு

* இரத்த உறைவைத் தடுக்க அட்டையின் உமிழ் நீரில் காணப்படும் பொருள் - ஹிருடின்

* கார்பஸ் லூட்டியம் சுரப்பது - ரிலாக்சின்

* பூனை மீன்களின் பொதுவான தமிழ்ப் பெயர் - விரால்

* செயற்கையான சிறுநீரகம் எனப்படுவது - டயலைசர்

* சிறுநீரகத்திற்கு செல்லும் இரத்தத்தின் அளவு விகிதம் - 20 -25 சதவீதம்

* மனித இதயத்தின் பேஸ் மேக்கர் ஆக வேலை செய்யும் பகுதி -எஸ்.ஏ. பகுதி

* சிறுநீரில் காணப்படும் யூரியாவின் அளவு - 2 சதவீதம்

* சிறுநீர்ப்பையில் கற்கள் உருவாகக் காரணம் - புரதம் மற்றும் பாஸ்பேட் குறைந்த உணவை உட்கொள்வதால்

* இத்த சிவப்பு செல்களில் காணப்படும் நிறமி - ஹீமோகுளோபின்

* இரத்தத்தில் இன்சுலின் அளவு குறைவதால் உடலில் சேரும் பொருள் - கீட்டோன்கள்

* 51 அமினோ அமிலங்களைக் கொண்ட பாலிபெப்டைடு ஹார்மோன் - இன்சுலின்

* மனிதரில் பிளேக் நோயை உண்டாக்கும் பாக்டீரியா - எர்சினியா பெஸ்டிஸ்

* கருவுறாத அண்டத்தின் வாழ்நாள் காலம் 12-24 மணி நேரம்

நன்றி:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பிரபலமான இடுகைகள்