தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

10.5.12

TET வினா விடை - அறிவியல் - பொது 1. அளவீடு

உலகில் உள்ள மக்கள் பல்வேறு அலகு முறையைப் பயன்படுத்தியுள்ளனர்.
  • FPS முறை (அடி, பவுண்டு, விநாடி) 
  • CGS முறை (செண்டிமீட்டர், கிராம், விநாடி) மற்றும் 
  • MKS முறை (மீட்டர், கிலோகிராம், விநாடி)
 என்று பயன்படுத்தி வந்தனர்.
1971 -ம் ஆண்டு உலக நாடுகள் அனைத்திற்கும் பொதுவாக ஒப்புக்கொள்ளப்பட்ட அனைத்துலக அலகு (SI) முறையாகும். The System International 'D' units - இதன் சுருக்கமே SI ஆகும்.

அனைத்துலக அலகு முறை ஏழு அடிப்படை அலகுகளையும், இரு துணை அலகுகளையும் கொண்டுள்ளது.

அடிப்படை அலகுகள்
(7)

1. நீளம் - மீட்டர் (மீ)

2. நிறை - கிலோகிராம் (கிகி)

3.காலம் - விநாடி (வி)

4. மின்னோட்டம் - ஆம்பியர் (ஆ)

5. வெப்பநிலை - கெல்வின் (கெ)

6. ஒளிச்செறிவு - கேண்டிலா (கே)

7. பொருளின் அளவு - மோல் (மோ)

துணை அலகுகள்
(2)

1. தளக்கோணம் - ரேடியன்

2. திண்மக்கோணம் - ஸ்டிரேடியன்

வழிநிலை அலகுகள்
:

1.பரப்பளவு - மீட்டர்2

2. கனஅளவு - மீட்டர்3

3. திசைவேகம் - மீட்டர்/ செகண்ட்

4.முடுக்கம் - மீட்டர்/ செகண்ட்2

5. அடர்த்தி - கிலோகிராம்/ மீட்டர்3

6.பரப்பு இழுவிசை - நியூட்டன்.மீ -1

7.வேலை, ஆற்றல் - ஜூல்

8. திறன் - வாட்

நன்றி:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பிரபலமான இடுகைகள்