தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

19.4.12

இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின்(STFI) ஐந்தாவது அகில இந்திய மாநாடு


இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் (STFI) 05ஆம் அகில இந்திய மாநாடு 2012, மே மாதத்தின் 17, 18 மற்றும் 19ஆம் தேதிகளில் தமிழகத்தின் கன்னியாகுமரியில் நடைபெறுகிறது. மாநாட்டின் நிறைவு நாளான 19.05.2012 அன்று பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்கள் எழுச்சியுடன் பங்கேற்கும் “கல்வி காக்கும் பள்ளி ஆசிரியர்களின் மாபெரும் பேரணி” நடைபெறுகிறது.

1000க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் மாநாட்டிலும், பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்கள் பேரணியிலும் கலந்து கொள்கின்றனர். 3 நாட்கள் நடைபெறும் மாநாட்டில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலான நாட்டின் அனைத்து பகுதிகளிலிருந்தும் ஆசிரியர்கள் முக்கடல் கூடும் குமரியில் சங்கமிக்கிறார்கள்.

STFI -இன் தோற்றம்
1986 ஆம் ஆண்டு புதிய கல்விக்கொள்கை என்ற பெயரில் கல்வி விற்பனைப் பொருளாக்கப்பட்ட பொழுது தமிழ்நாட்டிலும், தலைநகர் புதுடெல்லியிலும் அகில இந்திய அளவில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றது. அக்காலக்கட்டத்தின் தொடர்ச்சியில், அப்போராட்டங்களின் விளைவில் உதித்திட்ட அமைப்பு பள்ளி ஆசிரியர் இயக்கங்களின் ஒருங்கிணைப்பு குழு ஆகும்.

இந்திய அளவிலான பள்ளி ஆசிரியர் இயக்கங்களின் ஒருங்கிணைப்பு குழு என்ற பெயரில் தொடங்கப்பட்ட இவ்வமைப்பு 2000 ஆம் ஆண்டு இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு எனும் பேரமைப்பாக பரிணாம வளர்ச்சி பெற்றுள்ளது. இந்தியாவின் 22 மாநிலங்களில் பத்து இலட்சத்திற்கும் மேற்பட்ட பள்ளி ஆசிரியர்கள் இப்பேரமைப்பில் உறுப்பினர்களாக உள்ளனர்.

இந்திய அளவிலான உறுப்பு அமைப்புகள் (Member Organisations):
  • All Bengal Teachers Association (ABTA)
  • All Bengal Primary Teachers Association (ABPTA)
  • Andhra Pradesh United Teachers' Federation (APUTF)
  • Kerala School Teachers Federation (KSTA)
  • Tamilanadu Primary Teachers Federation (TNPTF)
  • Tamilanadu Post Graduate Teachers Association (TNPGTA)
  • TNHHSSGTA (Tamilanadu)
  • Tamilnadu Idainilai Aasiriar Sangam (TIAS)
  • Haryana Rajakiya Adhyapak Sangh (HRAS)
  • Govt. Teachers Union Punjab
  • United School Teachers Association Jammu & Kashmir
  • Rajastan Sikshak Sangh (RSS)
  • Tripura Govt. Teachers Association (TGTA) (HB Road)
  • Tripura Teachers Association (TTA) HB Road)
  • All Association Higher Secondary Teachers & Epmployees Association (AAHSTEA)
  • AHSTA Assom
  • KSPSTA Karnataka
  • Teachers Association Pondichery

STFI தமிழ் நாடு – மாநிலக்குழு
:
  • தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் (TNPGTA)
  • தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர்கழகம் (TNHHSSGTA)
  • தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம் (TIAS)
  • பாண்டிச்சேரி பட்டதாரி ஆசிரியர் சங்கம் (GTA-PANDI)
  • தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி (TNPTF)
ஆகிய 5 அமைப்புகள் தமிழ்நாட்டிலிருந்து இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பில் இணைந்துள்ளது.

STFI மாநாடுகள்
:
  • முதல் மாநாடு - மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா
  • இரண்டாவது மாநாடு - கேரள மாநிலத்தின் பாலக்காடு
  • மூன்றாவது மாநாடு - ஆந்திர மாநிலத்தின் ஹைதராபாத்
  • நான்காவது மாநாடு - ஹரியானா மாநிலத்தின் ஹிசார்
ஐந்தாவது அகில இந்திய மாநாடு
இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் (STFI) 05ஆம் அகில இந்திய மாநாடு தமிழகத்தின் கன்னியாகுமரியில் நடைபெறுகிறது. மாநாடு வெற்றிகரமாக நடைபெற்றிடவும், இயக்க நடவடிக்கைகளில் பங்கேற்றிடவும் தமிழ்நாடு தனியார் பள்ளி ஆசிரியர் அலுவலர் கழகம் (PSTA), குமரி மாவட்ட அனைத்து ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு ஆகிய ஆசிரியர் அமைப்புகள் ஆதரவுக் கரம் நல்கியுள்ளது.

மாநாட்டு அறைகூவல்
:
  • பொதுக்கல்வியைப் பாதுகாப்போம்; பலப்படுத்துவோம் 
  • பொதுப்பள்ளிமுறை & அருகாமைப் பள்ளி முறைக்கு வலுவாகக் குரல் கொடுத்தல்
  • கல்வி வணிக மயமாவதை எதிர்த்தல்
  • கல்வி தனியார் மயமாவதைத் தடுத்தல்
  • கல்வி அதிகாரங்கள் மத்திய அரசிடம் குவிவதை குறைத்திடக் கோருதல்
  • கல்வியை மாநிலப்பட்டியலுக்கு மீண்டும் கொண்டு வருதல்
  • கல்விக்கு தேசிய மொத்த உற்பத்தியில் 6 சதவீத நிதி ஒதுக்கீட்டுக்குப் போராடுதல்
  • கல்விக்கு மாநில அரசுகளின் நிதிநிலை அறிக்கையில் 30 சதவீத நிதி ஒதுக்கீட்டுக்குப் போராடுதல்
  • கல்வி உரிமைச்சட்டம் 2009 இன் குறைகளைக் களைந்து அமல்படுத்திடக் குரல் கொடுத்தல்
  • 0-18 வயது குழந்தைகளுக்கு இலவச கட்டாய தாய் மொழி வழிக் கல்வி அளிப்பது அரசியல் சட்டப்பூர்வ உரிமையாகிட வலியுறுத்துதல்
  • அனைத்து வகை பள்ளிகளிலும் இலவச முன்பருவ மழலையர் வகுப்புகள் தொடங்கிடப் போராடுதல்
  • குழந்தைகளுக்கு சுமையின்றி - மகிழ்வுடன் கற்றல் கற்பித்தல் முறைகள் வடிவமைத்திட குரல் கொடுத்தல்
  • சுயநிதிப் பள்ளிகளின் 25 சதவீத இலவச மாணவர் சேர்க்கைக்கு மத்திய, மாநில அரசுகள் கல்வி கட்டணம் செலுத்துவதைக் கைவிடக் கோருதல்
  • கல்வியில் அரசு - தனியார் பங்கேற்புக் கூட்டுத் திட்டங்களைத் திரும்பப் பெற்றிட வலியுறுத்துதல்
  • கல்வியில் வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்கள் நுழைவதைத் தடுத்து நிறுத்துதல்
  • கல்வியில், கல்வி நிறுவனங்களில் ஜனநாயகம் நிலைநிறுத்தப்பட குரல் கொடுத்தல்
  • சமூகம், பெற்றோர், மாணவர், ஆசிரியர் நல்லுறவினை மேம்படுத்திடக் குரல் கொடுத்தல்
  • தேசநலன், கல்விநலன், ஆசிரியர்நலன், மாணவர் நலன் காத்திடல்
  • பணிக்கலாச்சாரம் தொழில் அறத்தினை உயர்த்திப் பிடித்திடல்
  • சமச்சீர் கல்வி முறையைப் பாதுகாத்திடுதல்
  • தனியார் மயம், தாராள மயம், உலக மயம் எனும் மக்கள், ஆசிரியர், கல்வி விரோத கொள்கைகள் திரும்பப்பெறப்பட வலியுறுத்துதல்
  • கல்வியில் மதவாத, வகுப்புவாத, பிரிவினைவாத சக்திகளைத் தடுத்து நிறுத்துதல்
  • பள்ளி ஆசிரியர்களுக்கு ஓய்வூதியத்தினை மறுத்திடும், புதிய ஓய்வூதியத்திட்டத்தினைக் கைவிட போராடுதல்
  • ஓய்வூதிய நிதியில் அந்நிய நேரடி முதலீடுகளைக் கைவிட வலியுறுத்துதல்
  • இந்தியா முழுவதும் பள்ளி ஆசிரியர்களுக்கு மேம்படுத்தப்பட்ட ஊதியம் மற்றும் படிகள் கோருதல்
  • ஆசிரியர்களுக்கு வேலை பாதுகாப்பு உத்திரவாதம் வேண்டிடுதல்
  • தமிழ்நாட்டின் இடைநிலை சாதாரணநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் மற்றும் படிகள் கோரி போராடுதல்
  • ஆசிரியர் தகுதித்தேர்வு, எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு முறைகளைக் கைவிடக்கோருதல்
  • ஆசிரியர் காலிப்பணியிடங்களை முறையான பணி அமர்வில் வேலைவாய்ப்பக பதிவுமூப்பு, இனவாரி சுழற்சி முறையில் காலமுறை ஊதியத்தில் ஆசிரியர் நியமனம் வேண்டுதல்
மேற்கண்டவை உள்ளிட்டு கல்விக்காக  ஆசிரியருக்காக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திடுதல்.

மாநாட்டினை சிறப்பிப்போர்:
  • மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை இணை அமைச்சர்
  • தமிழக பள்ளிக்கல்வி அமைச்சர், 
  • உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதியரசர்கள், 
  • மத்திய, மாநில தொடக்க மற்றும் பள்ளிக்கல்வித்துறை அரசு செயலாளர்கள் மற்றும் கல்வித்துறை இயக்குநர்கள், 
  • பல்கலைக்கழக துணைவேந்தர்கள், 
  • கல்வியாளர்கள், 
  • நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள், 
  • மாவட்ட ஆட்சித்தலைவர்கள், இந்திய ஆட்சிப் பணி அலுவலர்கள் 
  • சகோதர, தோழமை மற்றும் தொழிற்சங்க இயக்கத்தலைவர்கள் 
இம்மாநாடு இந்தியாவின், தமிழகத்தின் ஆசிரியர் இயக்க, கல்வி வரலாற்றில் ஒரு மைல் கல்லாகும். இம்மாநாடு இந்தியாவின், தமிழகத்தின் கல்விக் கொள்கையில், ஆசிரியர்களின் சமூக, பொருளாதார நிலையில் உயர்வினை ஏற்படுத்தும் திருப்புமுனை மாநாடாகும். இம்மாநாட்டின் வெற்றி ஆசிரியர்களுக்கு உயர்வினையும், ஏற்றத்தினையும், பணிப் பாதுகாப்பினையும் உறுதிபடுத்திடும் எனும் நம்பிக்கை அளிக்கும் மாநாடாகும். இம்மாநாடு அனைத்து ஆசிரியர்களின் மாநாடாகும். மக்களின் மாநாடாகும். இம்மாநாட்டின் வெற்றி தமிழக ஆசிரியர்களின் கரங்களில் உள்ளது.

இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் 05ஆம் அகில இந்திய மாநாடு மகத்தான வெற்றி பெற்றிட அனைத்து தரப்பினரின் பங்கேற்பினை - பங்களிப்பினை STFI தமிழ்நாடு மாநிலக்குழு வேண்டுகிறது.

ஆற்றல்மிகு ஆசிரியப் பெருமக்களே! இம்மாநாட்டின் வெற்றிக்கு ஆதரவுகரம் நல்குவீர். பங்கேற்பினை, பங்களிப்பினை மனமுவந்து அளித்து உதவுவீர்.
 .

1 கருத்து:

  1. சுயநிதிப் பள்ளிகளின் 25 சதவீத இலவச மாணவர் சேர்க்கைக்கு மத்திய, மாநில அரசுகள் கல்வி கட்டணம் செலுத்துவதைக் கைவிடக் கோருதல்.. this type of attitude on your requirements is not good to show as you are the educated people... You people are also dying for money.

    பதிலளிநீக்கு


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்