தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

12.4.12

இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தை உறுதி செய்து சுப்ரீம் கோர்ட் உத்தரவு

நாடு முழுவதும் அனைத்து மாணவர்களுக்கும் கட்டாய கல்வி வழங்கும் அடிப்படை உரிமை என்ற சட்டத்தை சுப்ரீம் கோர்ட் ஏற்றுக்கொண்டுள்ளது. மேலும் இந்த சட்டத்திற்குட்பட்டு பள்ளிகளில் ஏழை சிறார் மற்றும் சிறுமிகளுக்கு 25 சதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டில் அனைவருக்கும் கல்வி என்ற அடிப்படை உரிமை சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. இதனை எதிர்த்து தமிழகம் உள்பட பல மாநிலங்களில் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டிலும் பதிவானது . வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி கப்பாடியா தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் விசாரித்து இன்று தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பில் ; அனைவருக்கும் கல்வி என்பது அரசியலமைக்கு சட்டமாக்கப்படுகிறது. இன்று முதல் இந்த சட்டம் நடைமுறைக்கு வருகிறது.

இதன்படி ஏழை மாணவர்களுக்கு 25 சதம் இடம்ஒதுக்கப்பட வேண்டும். இது அரசுபள்ளிகள், அரசு உதவி பெறுபள்ளிகள், மற்றும் பெறதா பள்ளிகள் இதனை நடைமுறைப்படுத்த வேண்டும். அதே நேரத்தில் அரசு உதவி பெறாக சிறுபான்மை பள்ளிகள் இதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. ஏற்கனவே சேர்க்கை முடிந்துள்ள பள்ளிகள் இது குறித்து பிரச்னை இருக்காது. இவ்வாறு நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் கூறியுள்ளனர். இதன் மூலம் பல மாநிலங்களில் நிலுவையில் இருந்த வழக்குகள் முடிவுக்கு வரும்.

நன்றி:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்