தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

18.4.12

மெரூனுக்கு மாறும் அரசு பள்ளி மாணவ- மாணவிகளின் சீருடை: உற்பத்தி பணிகள் தீவிரம்

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கான சீருடை நிறம் மாற்றப்படுகிறது.

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு அரசு இலவச சீருடை வழங்கி வருகிறது. ஆண்டுதோறும் பள்ளி்ககூடங்கள் தொடங்கிய ஒரு சில நாட்களில் இந்த சீருடை வழங்கப்படும். இந்நாள் வரை மாணவர்களுக்கு காக்கி நிற அரைக்கால் சட்டையும், வெள்ளை சட்டையும், மாணவிகளுக்கு இளம் நீல நிறத்தில் பாவாடையும், வெள்ளை நிறத்தில் சட்டையும் வழங்கப்பட்டன. மேல் நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவிகளுக்கு நீல நிற பாவாடை தாவணியும், வெள்ளை ரவிக்கையும் வழங்கப்பட்டன.

ஆனால் ஒவ்வொரு பள்ளிக் கூடத்திலும் ஒவ்வொரு நிறத்தில் சீருடை அணிந்தனர். இதையடுத்து அனைத்து அரசு பள்ளிகளிலும் ஒரே மாதிரியான சீருடை வழங்கவும், சீருடையின் நிறத்தை மாற்றவும் அரசு தீர்மானித்தது. அதன்படி வரும் கல்வியாண்டு முதல் சீருடை நிறம் மாறுவதோடு இதுவரை வழங்கப்பட்ட ஒரு ஜோடி சீருடைக்கு பதிலாக ஒரு மாணவருக்கு கல்வி ஆண்டு ஒன்றுக்கு 4 ஜோடி சீருடைகள் வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இனி 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அரைக்கால் சட்டை மற்றும் மேல் சட்டையும், மாணவிகளுக்கு பாவாடையும், சட்டையும் வழங்கப்படும். 6ம் வகுப்பு முதல் அனைத்து மாணவர்களுக்கும் முழுக்கால் சட்டையும், மாணவிகளுக்கு சுடிதார், துப்பட்டாவும் வழங்கப்படும்.

மாணவர்களுக்கான அரைக்கால் மற்றும் முழுக்கால் சட்டைகளை மெரூன் நிறத்திலும், மேல் சட்டையை இளம் பிரவுன் நிறத்திலும் உற்பத்தி செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது.

சீருடைகள் உற்பத்திக்காக அரசு ரூ.368 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. வரும் ஜூன் மாதம் பள்ளிக்கூடங்கள் திறந்தவுடன் மாணவ-மாணவிகளுக்கு சீருடை வழங்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது.

தமிழகத்தில் துணி நூல் பதனிடும் ஆலை ஈரோட்டில் மட்டுமே உள்ளது. குறிப்பிட்டக் காலத்தில் சீருடைகளை உற்பத்தி செய்வது இயலாது என்பதால் ஈரோடு தவிர்த்து ஹைதராப்த், மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள இச்சல் கரன்ஜி மற்றும் மும்பையில் உள்ள சில தனியார் துணி நூல் பதனிடும் ஆலைகளிலும் சீருடைகள் உற்பத்தி செய்யபப்ட்டு வருகின்றன.

ஈரோட்டில் உள்ள துணி நூல் பதனிடும் ஆலைக்கு கோ ஆப்டெக்ஸ் மூலம் சீருடைக்குத் தேவையான காடா துணிகள் பெறப்படுகிறது. அந்த காடா துணிகளை பிளீச்சிங் செய்து டையிங் செய்கின்றனர். டையிங் முடிந்தவுடன் மாவட்ட வாரியாக பேக் செய்து கோ ஆப்டெக்ஸிடமே துணிகள் ஒப்படைக்கப்படுகிறது. அங்கிருந்து மாவட்ட சமூக நலத்துறை அதிகாரிகளுக்கு துணிகள் அனுப்பி வைக்கப்படும்.

ஈரோட்டில் மட்டும் நாள் ஒன்றுக்கு 45,000 மீட்டர் துணி உற்பத்தி செய்யப்படுகிறது. தற்போதைய இலக்கான 120 லட்சம் மீட்டர் துணிகளை வரும் மே மாதம் 2வது வாரத்திற்குள் உற்பத்தி செய்யும் பொருட்டு ஆலை விடுமுறை இன்றி செயல்பட்டு வருகிறது.

இது குறித்து ஆலையின் நிர்வாக இயக்குனர் எம். பழனிச்சாமி கூறுகையில், அரசு அறிவி்த்தவாறு துணிகளை உற்பத்தி செய்ய நாங்கள் தீவிரமாக செயல்பட்டு வருகிறோம். குறிப்பிட்ட நேரத்தில் தரமான துணிகளை உற்பத்தி செய்து கொடுப்போம் என்றார்.

துணிகள் சமூக நலத்துறை மூலம் மாவட்டம் வாரியாக அனுப்பி வைக்கப்பட்ட பிறகு ஆடைகளாக தைக்கப்படும். இதற்காக தேசிய ஆடை வடிவமைப்பு மையத்தின் மூலம் மாதிரிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. அதில் ஒரு மாதிரியை முதல்வர் தேர்வு செய்த பிறகு மாணவர்களின் உடல் அமைப்புக்கேற்ப ஆடைகள் தைக்கப்படும். 


நன்றி:

1 கருத்து:


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்