தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

14.4.12

கல்வி அதிகாரிகள் சந்திப்பும் பெறப்பட்ட தகவல்களும்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் மா. குமரேசன், மாநில அமைப்புச் செயலாளர் க. இசக்கியப்பன், சென்னை மாவட்டத் தலைவர் கயத்தாறு ஆகியோர் 10.04.2012 அன்று சென்னையில் பள்ளிக் கல்வித் துறை அலுவலர்களைச் சந்தித்தனர்.
  • கல்வித்தகுதி 10+2+3 இருந்தால் மட்டுமே பதவி உயர்வு என்பதற்கு விலக்கு அரசிடம் கோரப்பட்டு உள்ளது. அரசின் பதிலின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என மதிப்புமிகு பள்ளிக்கல்வி இணை இயக்குனர் திருமதி. ராஜ ராஜேஸ்வரி உறுதி அளித்தார்கள். மதிப்புமிகு பள்ளிக்கல்வி செயலரும் வழக்கு தீர்ப்பை படித்து நல்ல முடிவு எடுப்பேன் என்றார்கள்.
  • தமிழாசிரியர் பதவி உயர்விற்கு 1310 பேர் உள்ளனர். இதில் +2 முடிக்காதவர்கள் பெயரும் இடம் பெற்றுள்ளது எனவும் 1998 ஜூலை வரை சுமார் 1100 பேர் இடைநிலை ஆசிரியர்களிலிருந்து தமிழாசிரியராக பதவி உயர்வு (2012-2013 கல்வியாண்டு) வழங்கப்படும் என தெரிகின்றது. மற்ற பாடங்களுக்கு இறுதி பட்டியல் தயாரிக்கவில்லை. இம்மாத இறுதியில் வெளியிடப்படும் என்றார்.
  • கன்னியாகுமரி மாவட்டம் S.L.B. அரசு மேல்நிலைப்பள்ளி இடைநிலை ஆசிரியரும் நமது அமைப்பின் நாகர்கோவில் நகர செயலாளருமான செல்வராஜ் 19.03.2010 முதல் 23.10.2011 வரை சம்பளம் தொடர்பாக கோப்பு 09.04.2012ல் J.D.P. ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. பள்ளிக்கலவி செயலருக்கு இந்த வாரத்தில் அனுப்பப்படும் என கூறினார்கள்.
  • ஆசிரியர் பணியிட மாறுதல் மே இறுதியிலும் பதவி உயர்வு மாறுதல் ஜூனிலும், ஆகஸ்டு இறுதிக்குள் புதிய நியமனங்களை நடத்திட கேட்டுக் கொள்ளப்பட்டது.
  • 23.08.2010க்கு முன்பு இடைநிலை ஆசிரியராக பணியாற்றி பட்டதாரி தமிழாசிரியர் பதவி உயர்வு பெற்றவர்கள் யாரும் ஆசிரியர் தகுதி தேர்வு எழுத தேவையில்லை. தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை D.E.O. அப்படி ஒரு சுற்றறிக்கை அனுப்பி பின் நமது சங்கத்தின் முயற்சியால் வாபஸ் பெற்றுள்ளார் என்பதை தகவலுக்கு தருகின்றோம். எனவே 23.08.2010க்கு முன்பு நியமனம் பெற்ற எந்த ஒரு ஆசிரியரும் தகுதி தேர்வு எழுத தேவையில்லை.
  • அரசாணை எண் 123, நாள் 10.04.2012 ஊதியக் குழு முரண்பாடு களைவதற்கான கமிட்டியில் ஊதியக்குழு பாதிப்புகளை உடனடியாக கொண்டு செல்ல உள்ளோம். 
 -க. இசக்கியப்பன்,
மாநில அமைப்புச் செயலாளர்.
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்