தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

6.4.12

கணிதம் பயில உதவும் கருவிப் பெட்டி - 46 லட்சம் வாங்க அரசு ஏற்பாடு

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஆறு முதல், 10 வகுப்பு பயிலும், 46 லட்சம் மாணவர்களுக்கு, கணிதம் பயில உதவும், "ஜியோமெட்ரி பாக்ஸ்களை' இலவசமாக வழங்க, "டெண்டர்' விடப்பட்டுள்ளது.

ஆரம்பக் கல்விப் படிப்பைத் தாண்டியதும், கணித வகுப்பில் பயன்படுத்தப்படும் உபகரணங்கள் கொண்ட பெட்டிக்கு, "ஜியோமெட்ரி பாக்ஸ்' என்ற பெயர் உள்ளது. இதற்கு, தமிழில் அனைவரும் ஏற்கும் பெயர் இன்னமும் உருவாக்கப் படவில்லை. ஆனாலும், "கணித உபகரணப் பெட்டி' என, அழைக்கப்படுகிறது.

டெண்டர்:
ஆறு முதல், 10ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு, "ஜியோமெட்ரி பாக்ஸ்' வழங்கப்படும் என, முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். இதையடுத்து, 46 லட்சத்து, 1,500 "ஜியோமெட்ரி பாக்ஸ்கள்' வாங்க, பள்ளிக் கல்வித் துறை டெண்டர் வெளியிட்டுள்ளது; மே 7ம் தேதி, டெண்டர் முடிகிறது. டெண்டர் பற்றிய முன் விளக்கக் கூட்டம், பள்ளிக் கல்வி இயக்குனர் அலுவலகத்தில், வரும் 19ம் தேதி நடக்கிறது.

நிபந்தனை என்ன?
  • நாள் ஒன்றுக்கு, 30 ஆயிரம் "ஜியோமெட்ரி பாக்ஸ்' தயாரிக்கும் திறன் கொண்ட நிறுவனங்கள் மட்டுமே, இதில் கலந்து கொள்ள முடியும்.
  • தங்களது தயாரிப்புகளின் மாதிரிகள் மற்றும் ஆய்வு அறிக்கைகளை வழங்க வேண்டும்.
  • உபகரணங்களுக்கு, ஆறு மாதங்களுக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும்.
  • ஒன்றிய அளவில் அல்லது மாவட்ட கல்வி அலுவலகம் அளவில் இவற்றை, "சப்ளை' செய்ய வேண்டும்.
  • "ஜியோமெட்ரி பாக்சில்' திட்டத்தின் பெயரும்; தமிழக அரசின், "லோகோவும்' இடம் பெற வேண்டும்.
  • பெட்டி ஓரங்கள், கூர்முனையாக இருக்கக் கூடாது. 
  • உபகரணங்கள் சேதம் அடையாத வகையில், தனித்தனியாக வைப்பதற்கான வசதியும்; 
  • பெட்டியின் உள்ளே மேல் பகுதியில், "மெட்ரிக்' சமன்பாடுகள், "பிதகோரஸ் தியரி' போன்ற, கணிதம் தொடர்பான அடிப்படை தகவல்களும் இடம் பெற்றிருக்க வேண்டும் 
இத்தகைய நிபந்தனைகளை ஏற்கும் நிறுவனங்கள் மட்டுமே, டெண்டரில் கலந்து கொள்ள முடியும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.

உபகரணங்கள் என்னென்ன?
  • புரோட்ராக்டர் 180 டிகிரி
  • ஸ்கேல் 6 இன்ச்
  • காம்பஸ் 15 செ.மீ.,
  • டிவைடர் 15 செ.மீ.,
  • செட் ஸ்குயர் 2 விதங்கள்
  • பென்சில் 10 செ.மீ.,
  • ஷார்ப்னர் 1
  • ரப்பர் 1
நன்றி:


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்