தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

6.4.12

தொடர் மதிப்பீட்டு முறையில் 4 லட்சம் ஆசிரியர்களுக்கு ஏப்ரல் இறுதியில் பயிற்சி

தொடர் மதிப்பீட்டு முறை தொடர்பாக ஏப்ரல் 16-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் 4 லட்சம் ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்க ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககம் திட்டமிட்டுள்ளது. இதில் அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 2 லட்சம் ஆசிரியர்களும், தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 2 லட்சம் ஆசிரியர்களும் பயிற்சி பெறவுள்ளனர்.

வரும் கல்வியாண்டில் இருந்து 1 முதல் 8-ம் வகுப்பு வரை மாணவர்களின் புத்தகச் சுமையைக் குறைப்பதற்காக முப்பருவ முறை அமல்படுத்தப்படுகிறது. அதன்படி, ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் வரை முதல் பருவமாகவும், அக்டோபர், நவம்பர், டிசம்பர் வரை இரண்டாம் பருவமாகவும், ஜனவரி, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் வரை மூன்றாம் பருவமாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. முப்பருவ முறையோடு தொடர் மதிப்பீட்டு முறையும் முதல்முறையாக அமல்படுத்தப்படுகிறது. தொடர் மதிப்பீட்டு முறையின் கீழ் முழு ஆண்டுத் தேர்வுக்கு மட்டும் முக்கியத்துவம் தராமல் மாணவரின் ஆண்டு முழுவதுமான செயல்பாடு, கற்றல் திறன் போன்றவை மதிப்பீடு செய்யப்படும்.இசை, விளையாட்டு, ஓவியம், மாணவர்களின் சுகாதாரம் போன்றவற்றுக்கும் மதிப்பெண் வழங்கப்படும்.

பயிற்சிக் கையேடு:
ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககம் சார்பில் தொடர் மதிப்பீட்டு முறையில் ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்க பாடவாரியாக கையேடுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதில் தொடர் மதிப்பீட்டு முறையில் மதிப்பெண்ணை எவ்வாறு பதிவு செய்வது என்பது குறித்தும், தர அட்டையை தயாரிப்பது குறித்தும் விளக்கப்பட்டுள்ளது. இசை, ஓவியம், விளையாட்டு, பேச்சு, சுகாதாரம் குறித்த புரிதல் ஆகியவற்றை எவ்வாறு மதிப்பீடு செய்வது என்பது குறித்தும் இந்த கையேட்டில் விளக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்குச் செயல்விளக்கத்துடன் எவ்வாறு பாடம் நடத்தலாம் என்பது குறித்தும் இந்த கையேட்டில் விளக்கப்பட்டுள்ளது.

இந்த கையேட்டில் குறிப்பிடப்பட்டுள்ள ஆலோசனைகள் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பயனுள்ளதாகவும், எளிமையாகவும் உள்ளனவா என்று மாவட்டந்தோறும் ஆய்வுகள் நடத்தப்பட்டன. இந்த ஆய்வில் தெரியவந்த விவரங்களும் பயிற்சிக் கையேட்டில் சேர்க்கப்பட்டுள்ளன.

பயிற்சி:
முதல் கட்டமாக, தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கும், வட்டார வள பயிற்றுநர்களுக்கும் தொடர் மதிப்பீட்டு முறையில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. அதன்பிறகு, அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கு ஏப்ரல் இறுதியிலும், தனியார் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு மே மாதமும் பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

நன்றி:

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்