தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

4.4.12

ஆசிரியர் தகுதி தேர்வு விண்ணப்பங்கள் : 12ம் தேதி வரை அளிக்க கூடுதல் அவகாசம்

ஆசிரியர் தகுதி தேர்வு விண்ணப்பங்களை அளிக்க வரும் 12ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதே போல், தேர்வையும் தள்ளி வைக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதி தேர்வு கட்டாயமாக்கப்பட்ட நிலையில் சமீபத்தில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சரின் அறிவிப்பினால் இந்த ஆசிரியர்கள் நியமனத்தில் குழப்பம் ஏற்பட்டது.

இடைநிலை ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதி தேர்வு மற்றும் மாநில வேலைவாய்ப்பு அலுவலக சீனியாரிட்டி அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதி தேர்வில் பெறும் மார்க் மற்றும் இன சுழற்சி அடிப்படையிலும் நியமனம் செய்யப்படுவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து ஆசிரியர் தகுதி தேர்வு விண்ணப்பங்களுக்கு தற்போது கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த 22ம் தேதி முதல் அனைத்து கல்வி மாவட்ட அலுவலகங்களிலும் இந்த விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விண்ணப்பங்களை பூர்த்தி செய்து ஒப்படைக்க இன்று (4ம் தேதி) கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் பாங்குகளில் செலான் பெறவும், கல்வி அலுவலகங்களில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவும் நீண்ட வரிசையில் விண்ணப்பதாரர்கள் காத்திருந்தனர்.

ஆனால் இதற்கான கால அவகாசத்தை வரும் 12ம் தேதி வரை நீட்டித்து ஆசிரியர் தேர்வு வாரியம் உத்தரவிட்டுள்ளது. அன்று மாலைக்குள் விண்ணப்பங்களை பெற்று சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் ஒப்படைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் தமிழகத்தில் முதுகலை ஆசிரியர் நேரடி நியமனத்திற்கான போட்டி எழுத்து தேர்வு வரும் மே மாதம் இறுதியில் நடக்கிறது. ஆசிரியர் தகுதி தேர்வு ஜூன் மாதம் 3ம் தேதி நடக்கிறது. இரு தேர்வுகளுக்கும் பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரிய தகுதி பெற்றோர் தயாராகி வருகின்றனர்.
இரு தேர்வுகளுக்கு இடையே போதிய கால அவகாசம் இல்லாத நிலையில் விண்ணப்பங்களை அளிக்க கால அவகாசம் வழங்கியது போல் ஆசிரியர் தகுதி தேர்வையும் தள்ளி வைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

நன்றி:

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்