தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

28.4.12

TET வினா விடை - குழந்தை மேம்பாடும் கற்பித்தல் முறைகளும் - பொது 11

1. அறிவியல் மையங்கள், கண்காட்சி ஆகியவை அகச் சிந்தனையை வளர்க்கும் சில வழிகள் என்று கூறியவர் - கூவர்.
2. மாணவனின் சிந்தனை வினாவிற்கான விடைகளை நோக்கி விரிந்து சென்று பல பொருத்தமான விடைகளை தருவது - விரி சிந்தனை
3. சோதிக்கப்படுவோனின் ஆக்கத் திறனை அளக்கப் பயன்படுவது - தலைப்பு தரும் சோதனை.
4. அகமுகன், புறமுகன் என மனிதர்களை இருவகையாக பிரித்தவர் - யூங்
5. சிக்கல் தீர்வு முறையை சோதனையை அறிமுகப்படுத்தியவர் - ஆஸ்போர்ன்.
6. புதுமைப்பயன் சோதனையை அறிமுகப்படுத்தியவர் - மால்ட்ஸ் மேன்
7. புதுமையான தனித்தன்மையுள்ளவற்றை புனையும் திறன் - ஆக்கத்திறன்.
8. ஆக்கத்திறனும், நுண்ணறிவும் வெவ்வேறான பண்புகள் என்று கூறியவர் - டரான்சு
9. மாணவனின் சிந்தனை வினாவிற்கான சரியான விடைகளைத் தேடி குவிந்து செல்லும் முறை - குவிச்சிந்தனை முறை
10. தார்ஸ்டன் கருத்துப்படி நுண்ணறிவு - ஏழு வகைப்படும்.
11. இரட்டைக் காரணி கோட்பாட்டில் சிறப்புக் காரணிக்கான எழுத்து - எஸ்
12. பொதுக் காரணியை தீர்மானிப்பது - மரபு
13. இரட்டைக் காரணி கோட்பாட்டில் பொதுக் காரணிக்கான எழுத்து - ஜி.
14. நுண்ணறிவுக் கோட்பாடுகள் - மூன்று வகைப்படும்.
15. நுண்ணறிவினை மூன்று வகையாக பிரித்தவர் - தார்ன்டைக்
16. நுண்ணறிவின் தந்தை என்று அழைக்கப்படுபவர் - ஆல்பிரட் பினே.
17. நுண்ணறிவு என்பது பொதுத் திறன் என்று கூறுபவர்கள் - ஒற்றைக் காரணி கோட்பாட்டினர்.
18. ஒருவரின் நுண்ணறிவு ஈவை பொதுத் திறன் மதிப்பினைக் கொண்டு அளவிட முடியும் என்று கூறியவர் - ஆல்பிரட் பினே.
19. நுண்ணறிவின் தன்மையை விளக்கிட இரட்டைக் காரணி கோட்பாட்டைக் கூறியவர் - சார்லஸ் பியர்மென்
20. வெக்ஸலரின் நுண்ணறிவு சோதனைக்கான வயது - 7-15
21. நுண்ணறிவு ஈவு என்ற சொல்லை பயன்படுத்தியவர் - டெர்மன்.
22. உளவியலறிஞரின் கருத்துப்படி நுண்ணறிவு என்பது - 16 வயது வரை இருக்கும்
23. 20 வயதான ஒருவரின் நுண்ணறிவு ஈவு கணக்கிட தேவைப்படும் கால வயது - 16 வயது
24. சொற்சோதனையை மேற்கொண்டவர் - வெக்ஸ்லர்.
25. ஆக்கத் திறன் மதிப்பீட்டிற்கு உதவும் 3 வகையான சோதனைகளை உருவாக்கியவர் - கில்பர்ட்
26. மின்ன சோடா சோதனையில் அடங்கியவை - 7 மொழிச் சோதனை உருப்படிகள் மற்றும் 3 படச் சோதனை உருப்படிகள்.
27. பொருட்களை புதிய பயன்பாட்டிற்காக பயன்படுத்துதல், - பயன் சோதனை.
28. புதியவனவற்றைக் கண்டு பிடிப்பதற்கான ஆக்கச் சிந்தனையில் நான்கு படிகள் இருப்பதாக கூறியவர் - கிரகாம் வாலஸ்.

நன்றி:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்