தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

19.1.12

தேசிய வாக்காளர் தினம் கொண்டாட உத்தரவு: அரசு அலுவலர்களுக்கு புது நிபந்தனை

"தமிழகம் முழுவதும், வரும் 25ம் தேதி தேசிய வாக்காளர் தினத்தையொட்டி, அனைத்து ஓட்டுச் சாவடி மையம், பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவ, மாணவிகளுக்கு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்க வேண்டும்' என, கூடுதல் தேர்தல் கமிஷன் கூடுதல் அலுவலர் ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

நாடு முழுவதும், தேசிய வாக்காளர் தினமாக ஜனவரி 25ம் தேதி கொண்டாடப்படுகிறது. தேசிய வாக்காளர் தினத்தில் அனைத்து ஓட்டுச் சாவடி, பள்ளி மற்றும் கல்லூரி, தாலுகா உள்ளிட்ட அலுவலகங்களில் கொண்டாடப்பட வேண்டும் என, தேர்தல் கமிஷன் கூடுதல் அலுவலர் ராஜேந்திரன் அனைத்து மாவட்ட கலெக்டர், வருவாய்த்துறை அதிகாரிகளுக்கும் உத்தரவு அனுப்பியுள்ளார்.

அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது
ஒவ்வொரு தாலுகா அளவிலும், சுவரொட்டிகள், துண்டு பிரசுரங்களில் அச்சிட்டு மக்கள் கூடும் அனைத்து இடங்களிலும் விநியோகிக்க வேண்டும். நகர் மற்றும் கிராம பகுதிகளில், தேசிய வாக்காளர் தினம் மற்றும் ஓட்டு போடுவதன் முக்கியத்துவம் குறித்து தாண்டோரா மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்த்தல், மனு செய்தவர்களின் பட்டியலை சரிபார்க்கவும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் அனைத்து சினிமா தியேட்டர்களில் விளம்பரம் செய்தல் வேண்டும். கல்விக்குழுக்கள், சுயஉதவி குழுக்கள், அரசு சாரா தொண்டு நிறுவனம் மூலம் ஓட்டு போடுதல் குறித்த விபரம் தெரிவிக்க வேண்டும். அதிக முறை ஓட்டு போட்ட வாக்காளர்களை கவுரவிக்க வேண்டும். 

பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்கு ஓவியம், கட்டுரை, குழு விவாதம் போட்டிகளும், கலாச்சார விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி பரிசு வழங்க வேண்டும். மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளி மற்றும் கல்லூரிகள், மத்திய அரசு அலுவலகம், வங்கிகள், கூட்டுறவு நிறுவனங்களில் பணிபுரியும் அலுவலர்களும், வாக்காளர் உறுதி மொழி ஏற்க செய்தல் வேண்டும்.

ஒவ்வொரு தேர்தலிலும், மதம், இனம், ஜாதி, மொழி தாக்கம் இல்லாமலும், எந்த ஒரு தூண்டுதல் இல்லாமல் அச்சமின்றி ஓட்டு போடுவோம் என, உறுதிமொழி ஏற்க வேண்டும். மேலும், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்கள், தேசிய வாக்காளர் தினத்தையொட்டி, அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்த வேண்டும். பொதுமக்களிடையே விழிப்புணர்வு மற்றும் ஓட்டு போடுவதன் அவசியத்தை எடுத்துரைக்க வேண்டும். விளையாட்டு போட்டி நடத்தி பரிசு வழங்க வேண்டும். தொடக்கப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், ஓட்டுச் சாவடி நிலை அலுவலர்களாக இருப்பதால், அந்தந்த ஓட்டுச் சாவடிகளில் நடக்கும் நிகழ்ச்சிகளில் கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டும்.

கமிஷன் நிபந்தனை: தேசிய வாக்காளர் தின விழாவில், எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசியல் கட்சியினரை மேடையில் அமர வைக்காமல், பார்வையாளர் வரிசையில் அமர வைக்க வேண்டும். அதிகமுறை ஓட்டு போட்டவர்களை கவுரவிப்பதோடு, அரசு அலுவலர்களை மட்டுமே மேடையில் அமர வைக்க வேண்டும். என, தேர்தல் கமிஷன், நிபந்தனை விதித்துள்ளது.


நன்றி:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்