தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

20.11.10

"டிட்டோஜாக்" உண்ணாவிரத போராட்டம் வெல்ல "தஇஆச" வாழ்த்து

ஒரு நபர் குழு அறிக்கையை கண்டித்து, தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் 20 - 11 - 2010 சனிக்கிழமை மாநில அளவில் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளனர். 2006ல், மத்திய அரசு நியமித்த ஆறாவது ஊதியக் குழுவில், இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை சம்பளம் ரூ. 9,300; தர ஊதியம்(கிரேடு பே) ரூ.4,200 ரூபாய் என நிர்ணயம் செய்தது.

மத்திய அரசு வழங்கும் சம்பளத்தில் சிறிதளவும் குறைவு இன்றி தமிழக அரசு ஊழியர்களுக்கு தரப்படும் என முதல்வர் அறிவித்தார். ஆனால், அலுவலர் குழு  தமிழகத்தைச் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை சம்பளம் ரூ.5,200; தர ஊதியம் ரூ.2,800 என குறைவாக நிர்ணயம் செய்தது. இது, ஆசிரியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. 

இப்பிரச்னையை தீர்க்க ஒரு நபர் குழுவை, தமிழக அரசு நியமித்தது. ஒரு நபர் குழு அறிக்கையிலும், ஆசிரியர்கள் புறக்கணிக்கப்பட்டனர். இதை கண்டித்து, மாநில அளவில் அந்தந்த மாவட்டத் தலைநகரங்களில் தொடக்கக் கல்வி ஆசிரியர் கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளனர்.

போராட்டம் வெல்ல "தஇஆச"-வின் வாழ்த்துகள். 
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்